உள்ளாட்சி தேர்தல்: நீலகிரியில் 45 பறக்கும் படை

உள்ளாட்சி தேர்தல்: நீலகிரியில் 45 பறக்கும் படை
X

உதகையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் 

நீலகிரியில் உள்ள 15 உள்ளாட்சி அமைப்புகளில் 3 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடக்கிறது. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 15 உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் 3 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பறக்கும் படை அலுவலர், 3 போலீசார், வீடியோ பதிவு செய்பவர் என பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதகை நகராட்சி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் உடமைகளை சோதனை செய்யப்பட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா, பரிசுப் பொருட்கள் வினியோகிக்க எடுத்து என்று சோதனை நடத்துகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் பறக்கும் படையினர் ரோந்து வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்