உதகையில் விவேகானந்தரின் 169-வது பிறந்தநாள் நினைவஞ்சலி
சுவாமி விவேகானந்தரின் சீடரான ஜேஜே குட்வின் தன்னலமற்ற சேவையை இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக வருடந்தோறும் விவேகானந்தர் பிறந்த நாளான இன்று உதகை தாமஸ் தேவாலயத்தில் நிகழ்த்தும் நன்றி வெளிப்பாட்டின் அமைதி பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த பிரார்த்தனை ஆனது மானஸ் அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளைய சமூகத்திற்கு விவேகானந்தரின் நினைவு கூறும் விதமாக இளைஞர்கள் தினமாக ஜனவரி 12-ஆம் தேதி, குட்வின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்படும் .
இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மக்களிடம் இளைஞர்களிடையே தியாகத்தின் நிலை உணர்த்த வேண்டுமென நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பாக சுவாமி திவ்யநாமாநந்தா மற்றும் மானஸ் அமைப்பின் நிறுவனர் மானஸ் சிவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
விவேகானந்தரின் 169-வது பிறந்த நாளான இன்று நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதேபோல் வருடம்தோறும் தவறாமல் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜே ஜே குட்வின் கல்லறையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu