/* */

நீலகிரியில் 255 முகாம்களில் தடுப்பூசி பணியில் ஈடுபட்ட 1020 பணியாளர்கள்

நீலகிரி கலெக்டர்அம்ரித் சூட்டிங் மட்டம் பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலாதலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நீலகிரியில் 255 முகாம்களில் தடுப்பூசி பணியில் ஈடுபட்ட 1020 பணியாளர்கள்
X

ஊட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 235 நிலையான தடுப்பூசி மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்களில் நடந்தது.

வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.255 முகாம்களில் ஆயிரத்து 20 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி கலெக்டர் அம்ரித், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டதா என்பதை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தியவர்களை சிறிது நேரம் கண்காணித்து அதன் பின்னர் அனுப்ப வேண்டும் என்று செவிலியரிடம் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 17 ஆயிரத்து 897 பேர், 2-வது தவணை 4 லட்சத்து 91 ஆயிரத்து 769 பேருக்கு மொத்தம் 10 லட்சத்து 9 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2 Jan 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது