குண்டும் குழியுமாக காணப்படும் உதகை பைக்காரா படகு இல்லம் சாலை

குண்டும் குழியுமாக காணப்படும் உதகை பைக்காரா படகு இல்லம் சாலை
X

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.

சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடியே சேதமடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்குள்ள சுற்றுலா தளங்களை காண பெரும்பாலும் அவர்களது சொந்த வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். குறிப்பாக ஒரு சில சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே உதகை தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலை சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக இருந்த நிலையில் தற்போது அந்த சாலை முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பைக்காரா படகு இல்லம் செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் நாள்தோறும் படகு சவாரிக்கு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது கோடை சீசன் நெருங்கியுள்ள நிலையில் இது போன்று சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகள் சீரமைக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!