செங்குத்தான மலைப்பாதை: ஒரு வாரத்தில் 5 விபத்துகள்

செங்குத்தான மலைப்பாதை: ஒரு வாரத்தில் 5 விபத்துகள்
X
உதகையில் இருந்து மசனகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் ஒரு வாரத்தில் 5 விபத்துக்கள் நடந்துள்ளது.

உதகையில் இருந்து மசனகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் ஒரு வாரத்தில் 5 விபத்துக்கள் நடந்துள்ளது. மீண்டும் இச்சாலை வழியே வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இச்சாலை வழியே சென்ற சென்னை வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இச்சாலை வழியே வாகனங்கள் செல்ல தடை விதித்தது. மேலும் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பாஸ் பெற்று செல்லும் வகையில் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த வாரம் இச்சாலை வழியே வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து ஏராளமான வாகனங்கள் இந்த செங்குத்தான மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் அனுமதித்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஐந்து விபத்துகள் நடந்துள்ளது. இதில் எந்தவித உயிர் சேதமும் இல்லாத பட்சத்திலும் மீண்டும் வாகனங்களை அனுமதித்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் தொடர் விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சாலையில் வழக்கம்போல் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business