பெண் மாவோயிஸ்டுக்கு மார்ச் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பெண் மாவோயிஸ்டுக்கு மார்ச் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்
X

ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட பெண் மாவோய்ஸ்டு சாவித்திரி.

பெண் மாவோயிஸ்டை மார்ச் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊட்டி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு கடந்த 1.4.2016 அன்று மாவோயிஸ்டுகள் வந்து சென்றனர். அவர்கள் பழங்குடியின மக்களிடம் அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டினர். மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர கூறினர். இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 9.11.2021 அன்று கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு சாவித்திரியை கேரளா போலீசார் வயநாட்டில் கைது செய்தனர். பின்னர் அவர் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். உதகை கோர்ட்டில் அனுமதி பெற்று சாவித்திரியை போலீசார் உதகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மாவோயிஸ்டு சாவித்திரியை குன்னூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்துக்கு சென்று சாவித்திரியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை முடிந்ததால் இன்று மாலை கொலக்கம்பை போலீசார் சாவித்திரியை உதகை கோர்ட்டில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆஜரானார். தொடர்ந்து நீதிபதி சாவித்திரியை வரும் 18.03.2022வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். சாவித்திரியை போலீசார் திருச்சூர் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!