உதகை தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த 100 அடி மரம்

உதகை தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த 100 அடி மரம்
X
ஊடரங்கு என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறபடுத்தினர்.

உதகை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த 100 அடி மரம் சாலையில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உதகையில் இருந்து நஞ்சநாடு மற்றும் மஞ்சூர் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் திடீரென விழுந்தது. ஊரடங்கு இருந்துவரும் நிலையில் விவசாய பணிகளுக்கு மட்டும் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது மரம் விழுந்த நேரத்தில் எந்த வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் அதிகாலை 5 மணியிலிருந்து சுமார் 7 மணி வரை 2 மணி நேரம் போராடி ராட்சத மரத்தை தீயணைப்புத்துறையினர் அப்புறப்படுத்திய பின்பு விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் சென்றன. மேலும் அதிகாலை வேளையில் அச் சாலை வழியாக நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ஊரடங்கு முடியும் வரை நடை பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture