ஆம்புலன்ஸ் வாங்க ரூ.10 லட்சம், இளைஞர்கள் வழங்கல்

ஆம்புலன்ஸ் வாங்க ரூ.10 லட்சம், இளைஞர்கள் வழங்கல்
X

நீலகிரி மாவட்டத்தில் நாக்கு சீமை படுகர் இளைஞர் சங்கம் சார்பில் நவீன ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப் பகுதிகளில் அதிகமான படுகரின மக்கள் உள்ளனர்.இதில் நாக்கு சீமை படுகரின இளைஞர் சங்கம் பல பகுதிகளில் பொது சேவைகளையும் சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. இதில் முக்கியமாக நகர்ப்புறங்களில் அவசர தேவைகளுக்காக அனைத்து பொது மக்களும் பயன் பெறும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தற்போது உள்ள நிலையில் மீண்டும் நாக்கு சீமை படுகரின இளைஞர் சங்கம் சார்பில் வெண்டிலேட்டர் கொண்ட அதிநவீன ஆம்புலன்ஸ் பெறப்படவுள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.இதில் நாக்கு சீமை படுகரின இளைஞர் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு காசோலையை வழங்கினர்.

Tags

Next Story
the future of ai in healthcare