சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் விருது
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்பு, புதிய பசுமை பொருட்கள், பசுமை தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நீடித்த நிலையான வளர்ச்சி, திடக்கழிவுகள் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுபடுத்துதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, காலநிலை மாற்ற தகவமைப்பு, காற்று மாசு கட்டுப்படுத்தல், மறுசுழற்சி செய்தல், சூழலியல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் அமைத்த குழு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 2 விருதுகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்ப படிவத்தை என்ற www.tnpcb.gov.in/pdf 2022/GuidelinesAppsGreenChampion23222.pdf இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்கள் https://nilgiris.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகடு தகுதி உடையவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 15.03.2022 அன்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அல்லது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu