உதகை அருகே அடர் வனப்பகுதி மக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிவாரண உதவி

உதகை அவலாஞ்சி மின் நிலைய குடியிருப்பு பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு நகரபாஜக சார்பில்காய்கறி தொகுப்புவழங்கப்பட்டது

உதகை நகர பாஜக சார்பில் அடர்ந்த வனப்பகுதியில் அவலாஞ்சி நீர்மின் நிலைய குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பாஜக சார்பில் மளிகை தொகுப்பும் காய்கறி தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி அடர்ந்த வனப் பகுதியின் மத்தியில் உள்ள அவலாஞ்சி மின் நிலைய பகுதியில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் இன்று வழங்கப்பட்டது.

நகர பா.ஜ.க . சார்பில் மாவட்ட பொருளாதார பிரிவு துணைத் தலைவர் பிரேம் யோகன். தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஹரி கிருஷ்ணன். நகரச் செயலாளர்கள் சுரேஷ்குமார் .ராகேஷ். வர்த்தக நகர தலைவர் சுதாகர். மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!