உலக மருத்துவர் தினத்தையொட்டி உதகையில் மரக்கன்றுகள் நடவு

உலக மருத்துவர் தினத்தையொட்டி, உதகை அரசு தலைமை மருத்துவமனையில், 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

உலக மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், உதகை அரசு தலைமை மருத்துவமனையில், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் உதகை ரத்த விங் அறக்கட்டளை சார்பில், 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, அவர்களைப் போற்றும் விதமாக, உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இதில், கலைஞர் தமிழ் பேரவையின் முகமது சபி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கமாலுதீன், பொருளாளர் காலிப், பொருளாளர் அப்துல் ஹமீது, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சாதிக், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!