உதகையில் செல்லப் பிராணிக்கு சால்வை போர்த்திய உரிமையாளர்

உதகையில் செல்லப் பிராணிக்கு சால்வை போர்த்திய உரிமையாளர்
X
உதகையில் தன் நாயை குளிரிலிருந்து பாதுகாக்க சால்வை அணிவித்துள்ள புகைப்படம் வைரல் .

ஊட்டியில் நிலவும் குளிரால் தனது செல்லப் பிராணிக்கு ஒருவர் சால்வை போர்த்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...

ஊட்டி என்றாலே குளு குளு காலநிலை நிலவும் குளிரிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பனியன், தொப்பி, உள்ளிட்ட உல்லன் ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலம் என்றால் கூடுதலாக உல்லன் ஆடைகளை அணிந்து குளிரிலிருந்து தப்பிக்க ஏதுவாக பெட்ஷீட், சால்வை அணிந்து கொள்வார்கள்.

குளிரான காலநிலை வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் பொருந்தும் உதகையில் தனது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணி நாய்க்கு குளிரிலிருந்து பாதுகாக்க அதன் உரிமையாளர் சால்வை அணிவித்து பாதுகாப்பாக வைத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாயும் "யப்பா என்னா குளிரு" என்ற பாவனையுடன் போர்த்திய சால்வையோடு வீட்டு மாடியில் உலா வருகிறது.

Tags

Next Story
ai as the future