கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய வனத்துறை அமைச்சர்
உதகையில் நடந்த நிகழ்ச்சியில், கோவில் பணியாளர்களுக்கு, கொரோனா தொகையாக 4000 மற்றும் மளிகைப் பொருட்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 கோவிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, உதகையில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், கோயில் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க, மருத்துவமனைகளில் இரட்டிப்பு படுக்கை வசதி, ஆக்சன் பற்றாக்குறையை நீக்கி போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu