அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பேன்: காங்கிரஸ் எம்.எல்.ஏ

அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பேன்:    காங்கிரஸ் எம்.எல்.ஏ
X
உதகை தொகுதியில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் செய்து தரப்படும் வெற்றி பெற்ற வேட்பாளர் பேட்டி.

சிறந்த சுற்றுலா தலமாக உள்ள உதகையில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுப்பேன் என உதகை சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் முடிந்த நிலையில் உதகை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று உதகையில் உள்ள சேரிங் கிராஸ் பகுதியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடையே பேசிய அவர் உதகையில் தனக்கு வாக்களித்த, அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு சுற்றுலா நகரமான உதகையில் தேர்தலுக்கு முன் தான் கூறியிருந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் குறிப்பாக ரோப்கார் மற்றும் நவீன பார்க்கிங் தளம் அமைப்படுமெனவும் உதகை தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படை தேவைகள் செய்து தரப்படுமென கூறினார்.

Tags

Next Story