மலை காய்கறிகளுக்கு நிரந்தர விலை-மநீம வேட்பாளர்

மலை காய்கறிகளுக்கு நிரந்தர விலை-மநீம வேட்பாளர்
X

மலை காய்கறிகளுக்கு நிரந்தர விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மைய வேட்பாளர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டமன்றத் தொகுதிக்கு மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் .பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ராஜ்குமார், நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்கவும் அதேபோல் காய்கறிகளுக்கும் சரியான முறையில் விவசாயிகளுக்கு விலை கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் தனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.சுற்றுலா நகரமான உதகையில் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தத்திற்கான பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மாற்றத்திற்கான வழியை மக்கள் முன்னெடுத்து மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ai applications in future