மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த எஸ்பி

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த எஸ்பி
X

நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு மாவட்ட எஸ்பி., நபர் 1க்கு ரூ. 200 வீதம் 50 நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தார் .

மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல பகுதிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட எஸ்பி., உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நகராட்சி மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் தவறினால் அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் இம்மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் இதை கருத்தில் கொண்டு கட்டாயம் மாஸ்க் அணிந்து ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!