கறை நல்லதுங்க புகைப்படம் வெளியீடு

கறை நல்லதுங்க புகைப்படம் வெளியீடு
X

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இன்று வெளியிட்டார்.

தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "கறை நல்லது NGa'' என்ற விழிப்புணர்வு புகைப்படம் இன்று வெளியிடப்பட்டது.உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளிடையே கேட்டுக்கொண்டார்.

மேலும் இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு பணியை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. இந்த தேர்தலில் நீலகிரி மாவட்டம் முழுவதும் "கறை நல்லது NGa " என்ற வாசகம் கொண்ட புகைப்படம் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Tags

Next Story