வாக்குப் பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட ஆட்சியர்

வாக்குப் பதிவு இயந்திரங்களை  பார்வையிட்ட ஆட்சியர்
X
உதகையில்3சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணுவாக்குபதிவு இயந்திரங்கள்அனைத்துகட்சி பிரமுகர்கள்முன்னிலையில் கொண்டுசெல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தொகுதிக்கு 15 வீதம் மூன்று தொகுதிகளுக்கும் 45 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார் பின்பு அந்தந்த பகுதிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட உள்ளதாகவும், இதன் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பயிற்சி முடித்த அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவர் என ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai and business intelligence