நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம்
X
நீலகிரியில் மாற்றத்திற்கு இந்த முறை நாம் தமிழர்கட்சி பாடுபடும் என கூட்டத்தில் சூளுரை.

உதகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏடிசி திடலில் நடைபெற்றது. மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் தமிழர் கட்சி பாடுபடும் என உறுதி.

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து பல கட்சிகள் தங்களின் சுற்றுப் பயண பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக விழா கட்சியின் கொள்கைகள் குறித்த பரப்புரைகள் மேடைகள் தோறும் அரங்கேறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் உதகை ஏடிசி திடலில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேசிய நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா பேசும்பொழுது, இம்மாவட்டத்தில் முக்கிய பிரச்சனைகளாக உள்ள அனைத்தும் நிவர்த்தி செய்யப் படுவதாகவும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி குரல் கொடுப்பதாகவும், பிரதான தொழிலாக செய்து வரும் பழங்குடி இன மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

வனவிலங்கு மோதல்கள் தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதற்கான தீர்வும் நாம் தமிழர் கட்சியின் மூலம் காணப்படும் என இக்கூட்டத்தில் உரையாற்றப்பட்டது. உதகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு