/* */

செந்நாய்களை துரத்திய காட்டெருமைகள்

செந்நாய்களை துரத்திய காட்டெருமைகள்
X

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதை குடியிருப்பு பகுதியில் செந்நாய் கூட்டத்தை விரட்டிய காட்டெருமை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லட்டி மலைப்பாதை பெரும்பாலும் வனப்பகுதி வழியே செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. கேரளா மற்றும் மைசூருக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இச்சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை அவ்வப்போது யானை ,காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையிலேயே நடமாடுவதால் மாலை 6 மணிக்கு மேல் பெரும்பாலும் இச்சாலை வழியே செல்லும் வாகனங்கள் கவனத்துடன் செல்லவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்லட்டி வன சோதனை சாவடி அருகே உள்ள குடியிருப்பை ஒட்டி சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது செந்நாய்கள் கூட்டம் அதை சூழ்ந்தன.குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்த காட்டெருமைகளை செந்நாய்கள் துரத்துவதும் மேலும் செந்நாய்கள் காட்டெருமைகளை துரத்தும் பரபரப்பான வீடியோ காட்சிகளை அங்கிருந்த குடியிருப்பு வாசி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.அடர் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் செந்நாய்கள் கூட்டம் தற்போது குடியிருப்பை ஒட்டிய பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 28 Feb 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!