போக்குவரத்து நிறுத்தம்: சுற்றுலா நகரங்களில் மக்கள் பாதிப்பு

போக்குவரத்து நிறுத்தம்:  சுற்றுலா நகரங்களில் மக்கள் பாதிப்பு
X
உதகையில் 6 கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்துகள் நிறுத்தம், சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்களும் பாதிப்பு.

மலை மாவட்டமான நீலகிரியில் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் ,85 சதவீத போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் தவிப்பு.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உதகை ,குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய உதகை கோட்டத்தில் சுமார் 257 பேருந்துகள் உள்ளன. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் 85% பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் , நீலகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவை இல்லாததால் உதகையில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல அரசு பேருந்துகளை நம்பி மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து சேவையை 85% நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் தங்களது பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உதகைக்கு பேருந்துகளில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தனியார் வாகனங்கள் 2000 ரூபாய் வரை கட்டணம் கேட்பதால் சுற்றுலா பயணிகள் தவிப்பு உள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக போக்குவரத்து கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு தடங்கலின்றி பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் உதகை பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!