கல்லட்டி சாலையில் வாகனங்கள் செல்ல தடை

கல்லட்டி சாலையில் வாகனங்கள் செல்ல தடை
X

தொடர் விபத்து எதிரொலியாக உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில வாகனங்கள் செல்ல தடை விதித்து நீலகிரி மாவட்ட எஸ்பி., பாண்டியராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இச்சாலை வழியே சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இச்சாலை வழியே செல்லும் வாகனங்களுக்கு தடை விதித்தது. மேலும் உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதி வழங்கியது.வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் இரண்டு ஆண்டுகளாக எந்தவித விபத்தும் ஏற்படவில்லை. இந்நிலையில் இச்சாலையில் கடந்த வாரம் முதல் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

அனுமதித்த ஒரு வாரத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. பெரும்பாலும் விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் கேரளா பதிவு எண் கொண்டதாகும்.எந்த உயிர் சேதமும் ஏற்படாத நிலையில் மீண்டும் வாகனங்களை அனுமதித்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளதாக பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்த நிலையில் இச்சாலை வழியே செல்லும் பிற மாநில வாகனங்களுக்கு தடை விதிப்பதாக நீலகிரி மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!