கோவில் திருவிழா நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவில் திருவிழா நடத்த வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்
X

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதகை மாரியம்மன் கோவிலில் பஜனை பாடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவுறுத்தியுள்ள வழி நெறிமுறைகளின்படி நடத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.மேலும் மாவட்ட நிர்வாகமானது கட்டுப்பாடுகளுடன் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என இந்து அமைப்பினர் இன்று உதகை மாரியம்மன் திருக்கோவிலில் முற்றுகையிட்டு பஜனை பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்பு இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களது வழிபாடுகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வரும் நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து பக்தர்கள் எதிர்நோக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் இக்கோவிலில் தொடரும் என கூறினர்.

Tags

Next Story
ai solutions for small business