உதகையில் களை கட்டிய நுங்கு விற்பனை

உதகையில் களை கட்டிய நுங்கு விற்பனை
X

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கோத்தகிரி உள்ளிட்ட சாலையோரங்களில் நுங்கு, பதநீர் விற்பனை களை கட்டியுள்ளது.

காலை, மாலை என இரு வேளைகளிலும் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் உறைபனி தாக்கம் ஒருபுறம் இருக்க அதே போன்று வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது.வெயில் காரணமாக பொதுமக்கள் நீராதாரம் மிக்க உணவுகளை உண்கின்றனர். இதில் குறிப்பாக பழங்கள், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை பருகி வருகின்றனர்.இந்நிலையில் சமவெளி பகுதிகளில் அதிகமாக வெயில் காலங்களில் தாகத்தைத் தணிக்கும் நுங்கு அதிகமாக விற்பனை செய்யப்படும்.

ஆனால் தற்பொழுது நீலகிரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் காரணமாக நுங்கு, பதநீர் விற்பனை பல பகுதிகளில் களை கட்டியுள்ளது. குன்னூர் சாலை மற்றும் மைசூர் செல்லும் பிரதான சாலைகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
ai business transformation