சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 44 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 44 ஆண்டு சிறை
X

குன்னூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகர் பகுதியில் சமையலராக பணிபுரியும் ஆண்டனி வினோத் என்ற நபர் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்ததையடுத்து ஆண்டனி வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம் பாலியல் துன்புறுத்தல் ,கொலை மிரட்டல் உட்பட மேலும் ஓர் வழக்கு என மூன்று வழக்கு பிரிவின் கீழ் 44 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த பாலியல் சம்மந்தப்பட்ட வழக்குகளில் இன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உச்சபட்ச தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!