நீலகிரி குடியரசு தின விழா

நீலகிரி குடியரசு தின விழா
X
உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்ன சென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பை ஏற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் அனைத்து துறைகளில் சிறந்து பணியாற்றியவர்களுக்கு சான்றுகளை வழங்கினார்.

நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மலை மாவட்டமான நீலகிரியில் உதகையில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் .

பின்பு காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் மேலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், வருவாய்த்துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, என 1,28, 49,780 மதிப்பில் அந்தந்த துறைகளைச் சார்ந்த பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். மேலும் பரதநாட்டியம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு நடனம் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன், மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்