உதகையில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி

உதகையில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி
X

ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு அதை பொறுப்புடன் செய்ய வேண்டுமென தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

11 வது தேசிய வாக்காளர் தினம் இன்று உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் புதிய, இளைய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறும் பொழுது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளதெனவும் பணத்திற்காக வாக்குகளை விற்க கூடாது எனவும் பொறுப்புடன் இருந்து வாக்களிக்கும் உரிமையை சரியாக பயன் படுத்துவோம் என கூறினார்.இந்நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், கோட்டாட்சியர் நிர்மலா ,கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!