வேளாண் விற்பனை பொருள் குழு தலைவர் பதவியேற்பு

வேளாண் விற்பனை பொருள் குழு தலைவர் பதவியேற்பு
X

உதகையில் வேளாண் விலை பொருள் விற்பனை குழு தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே ஆர் அர்ஜுனன் மற்றும் பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் விலை பொருள் விற்பனை குழு தலைவர் உட்பட பொறுப்பாளர்கள் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும் பதவி வழங்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வேளாண் விலை பொருள் விற்பனை குழு தலைவர் அர்ஜுனன் பேசும் போது, தமிழக அரசு விவசாயிகளுக்காக ஏற்படுத்தியிருக்கும் திட்டங்களை சரியான முறையில் விவசாயிகளிடையே சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் புதிதாக தக்காளி குளிர்பதன கிடங்கும் உருளை கிழங்கு கிடங்கும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவசாயிகள் எதிர்பார்க்கும் அனைத்தும் இம்மாவட்டத்தில் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.இந்த பதவியேற்பு விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உட்பட அதிமுக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்