உதகையில் கலெக்டர் தலைமையில் மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம்
உதகை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்ட கலெக்டர் அம்ரித்.
நீலகிரி மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 தாலுகா மற்றும் துணை தாலுகா மருத்துவமனைகள், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொற்றுநோயை தடுக்கவும், நோயாளிகள் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெறும்போது மனநிம்மதியுடன் இருத்தல் என 30.04.2022 வரை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை முகாம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலெக்டர் பேசும்போது, நமது மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும். கழிப்பறை, குளியலறைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தேவையற்ற கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
நாம் வேலை பார்க்கும் இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும். நமது மருத்துவமனையை மகத்தான மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் சோலை மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் பணியில் ஈடுபட்டனர். முகாமில் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu