மூதாட்டியிடம் 73 லட்சம் மோசடி: ஒருவர் கைது
விஷால் பாபா.
குன்னூர் பகுதியை சேர்ந்த தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளருக்கு இங்கிலாந்து நாட்டில் இருப்பதாக ஒரு நபர் சமூக வலைத்தளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினர்.
அவர் மனைவி இறந்ததால் குழந்தையுடன் வசிப்பதாக கூறி அங்கு எடுத்த புகைப்படங்களை அனுப்பி உள்ளார்.
அந்த நபர் தனது குழந்தை தங்களுக்கு பரிசு அனுப்புவதாக கூறியதால், இதனை எஸ்டேட் பெண் உரிமையாளர் நம்பினார்.
பின்னர் சுங்கத்துறை அதிகாரி என பெண் ஒருவர் மூதாட்டியை தொடர்புகொண்டு உங்களுக்கு வந்த பரிசுப் பொருளை இந்திய நாட்டில் இறக்குமதி செய்ய வரி செலுத்த வேண்டும் என்றார். அந்த நபர் பரிசு அனுப்புவதற்கு 10 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு வரி செலுத்த வேண்டும் என்றதை நம்பி எஸ்டேட் உரிமையாளர் நகைகளை அடமானம் வைத்து வங்கி மூலம் ரூபாய் 73,00,000 செலுத்தினார்.
பரிசு வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களை தேடினர்.
மும்பைக்கு சென்று தானே பகுதியை சேர்ந்த விஷால் பாபாவை (36) கைது செய்தனர்.
இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu