ஊட்டியில் ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை:அதிகாரிகள் விசாரணை

ஊட்டியில் ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை:அதிகாரிகள் விசாரணை
X

ஊட்டியில் மான் பூங்கா அருகே கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை

ஊட்டியில் ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டியில் மான் பூங்கா ஏரி கரையோரத்தில் ரேஷன் கோதுமை கொட்டப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கோதுமை தண்ணீரிலும், தரையிலும் கொட்டப்பட்டு இருந்ததை கண்டனர். ரேஷனில் வாங்கிய நுகர்வோர் யாரும் இதை கொட்டினார்களா? அல்லது ஊழியர்கள் யாரும் கொண்டு வந்து கொட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!