தொழிற்பயிற்சி சான்றிதழில் திருத்தம் செய்ய நாளை கடைசி:நீலகிரி கலெக்டர் தகவல்

தொழிற்பயிற்சி சான்றிதழில் திருத்தம் செய்ய நாளை கடைசி:நீலகிரி கலெக்டர் தகவல்
X
பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், ஆதார் எண், புகைப்பட மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை நாளைக்குள் சரி செய்து கொள்ளலாம்.

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. தொழிற் சான்றிதழ்களில் எழுத்து பிழை திருத்தங்கள் இருப்பின், அதாவது பயிற்சியாளரின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், ஆதார் எண், புகைப்பட மாற்றம், பயிற்சி பெற்ற தொழிற்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களை நாளைக்குள் சரி செய்து கொள்ளலாம்.

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு 10ம் வகுப்பு, 8ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ. மாற்றுச்சான்றிதழ், தேசிய தொழிற் சான்றிதழ், ஐ.டி.ஐ. மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, புகைப்படம் 2, ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் திருத்தப்பட கூடிய திருத்தங்களுக்கு உரிய ஆவணங்களை நேரில் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0423-2231759 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!