உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

கொட்டும் மழையில் உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு அறிவித்த ஊக்க ஊதியம், அனைத்து கிராம, பகுதி சுகாதார செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய நல சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில், உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பு மாநில செயலாளர் கோவிந்தம்மாள், மாவட்ட தலைவர் லோகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் நியமனம் கருத்துருவை கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

கொட்டும் மழையில் செவிலியர்கள் குடைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture