குன்னூர் மலைப்பாதையில் விபத்து: இரண்டு வாலிபர்கள் காயம்

குன்னூர் மலைப்பாதையில் விபத்து: இரண்டு  வாலிபர்கள் காயம்
X

Namakkal news- விவசாயி உயிரிழப்பு (கோப்பு படம்)

குன்னூர் மலைப்பாதையில் டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் இரண்டு வாலிபர்கள் காயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 22). இவரது நண்பர் சுபாஷ் (வயது 21).

இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிள் மூலம் கோவை சென்று கொண்டிருந்தபோது குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையிலும், சுபாஷ் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குன்னூர் காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ராமச்சந்திரனை (வயது 39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் இன்று அதிகாலை இதே வழித்தடத்தில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் குறும்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குரங்குகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!