செல்போனை குறிவைக்கும் திருடர்கள்.!

செல்போனை குறிவைக்கும் திருடர்கள்.!
X
உதகையில் செல்போன் திருட்டு கும்பல் ஒரே வாரத்தில் விலை உயர்ந்த 3 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.

உதகை நகரில் சமீபகாலமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் செல்போன் திருட்டு அதிகமாகியுள்ளது. கடந்த வாரம் ஏடிசி பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்கள் செல்போன்களை திருடிச் சென்றனர்.

மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மார்க்கெட் பகுதியில் பேருந்தில் பயணம் செய்ய நின்றிருந்த இளைஞர்களிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் செல்போனை திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரித்தனர்.

ஒரே வாரத்தில் 20 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் என 60 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் விரைந்து செல் போன் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products