நீலகிரி மாவட்டத்தில், வாக்குச்சாவடி எண்ணிக்கை 689 ஆக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில்,  வாக்குச்சாவடி எண்ணிக்கை  689 ஆக அதிகரிப்பு
X

Nilgiri News, Nilgiri News Today -நீலகிரி மாவட்டத்தில், மொத்தம் 689 வாக்குச்சாவடிகள். (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today -நீலகிரி மாவட்டத்தில் திருத்தப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்படி மொத்தம் 689 வாக்குச்சாவடிகளாக அதிகரித்துள்ளது.

Nilgiri News, Nilgiri News Today - நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சுமார் 5.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஊட்டி தொகுதியில் 138 இடங்களில், 239 வாக்குச்சாவடிகளும், கூடலூர் தொகுதியில், 99 இடங்களில் 222 வாக்குச்சாவடிகளும், குன்னூர் தொகுதியில், 132 இடங்களில் 225 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 686 வாக்குச்சாவடிகள் இருந்தன.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடி உருவாக்கும் பணிகள் மற்றும் ஏற்கனவே இருந்த பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் திருத்தங்கள் மேற்கொள்ள நேற்று முன்தினம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்டார்.

அதன்படி ஊட்டி தொகுதியில் 239 வாக்குச்சாவடிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கூடலூர் தொகுதியில் 222 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில், 224 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் அத்திபாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி வாக்காளர்களின் கோரிக்கையை ஏற்று, புத்தூர்வயல் அரசு உயர்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டது.

குன்னூர் தொகுதியில், 225 ஆக இருந்த வாக்குசாவடிகள் 226 ஆக அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 3 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 689 ஆக, எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருத்தப்பட்ட விவரங்கள் அடங்கிய வாக்குச்சாவடி பட்டியல் குறித்த தொகுப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில் ஆர்.டி.ஓ.க்கள் மகாராஜ், முகமது குதரதுல்லா, பூஷணகுமார், தேர்தல் தாசில்தார் காயத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!