ஓட்டுப்பதிவு கடைசி ஒரு மணி நேரம் கோவிட் -19 பாதித்தவர்களுக்கு அனுமதி

ஓட்டுப்பதிவு கடைசி ஒரு மணி நேரம் கோவிட் -19 பாதித்தவர்களுக்கு அனுமதி
X
ஓட்டுப்பதிவில், கடைசி ஒரு மணி நேரம், கோவிட் - 19 பாதிப்புள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரியில், மூன்று தொகுதிகளில், ஏப்., 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறுகையில்,மாவட்டத்தில் மனித. விலங்கு மோதல் அச்சுறுத்தல் உள்ள வனப்பகுதியை யொட்டி வாழும் மக்கள் பாதுகாப்பாக வந்து ஓட்டளிக்க வனத்துறை மற்றும் போலீசார் கூட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டு வாகன வசதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைதூர கிராமங்களான அல்லி மாயார், கொலக் கம்பை, குந்தா உள்ளிட்ட கிராம மக்கள் சிரமமின்றி வந்து ஓட்டளிக்க ஏதுவாக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நாளன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடைசி ஒரு மணி நேரம் கோவிட் - 19 பாதிப்புள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு அதை பயன்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. என்றார்.

Tags

Next Story
ai in future agriculture