5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
X

குழந்தை திருமணத்தை தடுக்க வலியுறுத்தும் மாதிரி படம் 

நீலகிரியில் நடக்கவிருந்த 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் கூடலூர் மற்றும் குன்னூரில் தலா 2, ஊட்டியில் 1 என மொத்தம் 5குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட சமூக நல அதிகாரிக்கு தகவல் கிடைத்ததன் பேரில், உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதன்பின் அவர்கள்அங்கு திருமணங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தி 18வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகள், 21வயதுக்குக் கீழ் உள்ள ஆண்கள் திருமணம் செய்ய முயற்சித்த போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் அளித்ததன் பேரில், பெண்குழந்தைகளை திருமணம் செய்ய முயன்ற 5 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் திருமணம் செய்ய இருந்த பெண்குழந்தைகளுக்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தகுந்தஆலோசனைகளை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!