அழுகும் கொய்மலர்கள்... வாடும் குன்னூர் விவசாயிகள்!

அழுகும் கொய்மலர்கள்...  வாடும் குன்னூர் விவசாயிகள்!
X
குன்னூரில் கொய்மலர்கள் அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் பெரும்பாலானோர் வங்கிகளில் கடன்களை பெற்று, கார்னேஷன், ஜெர்பரா, லில்லியம் உட்பட பலவகை மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இவ்வகை மலர்கள் பெங்களூர் வழியாக பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருவதால் டெல்லி, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதேபோன்று தமிழகத்தில் திருமணம் திருவிழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், உற்பத்தி செய்யப்படும் மலர்கள் வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, பல லட்சம் மதிப்பிலான கொய்மலர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!