உதகை: கூலித் தொழிலாளர் வழங்கிய நிவாரண நிதி

உதகை: கூலித் தொழிலாளர் வழங்கிய நிவாரண நிதி
X
நீலகிரி கலெக்டரிடம் கிராம மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர்.

உதகையில் கூலி தொழிலாளர் தம்பதி மற்றும் மேலூர் ஓசட்டி கிராமத்தினர் கொரோனா நிவாரண நிதியாக முப்பதாயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ நிதியாக பல தரப்பினரும் மாவட்ட கலெக்டரிடம் காசோலை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள மேலூர் ஓசட்டி என்னும் கிராமத்தினர் ரூபாய் 30 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதேபோல் கூலி தொழிலாளர்களாக பணி புரியும் தம்பதியினர் தாங்கள் சேமித்து வைத்திருந்த 3 ஆயிரத்து 500 ரூபாயை ரொக்கமாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!