நீலகிரி மாவட்டத்தில், 2.30 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க திட்டம்; கலெக்டர் அம்ரித் தகவல்

நீலகிரி மாவட்டத்தில், 2.30 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க திட்டம்; கலெக்டர் அம்ரித் தகவல்
X

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி, பிங்கர்போஸ்ட் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில், 2.30 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Nilgiri News, Nilgiri News Today- தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், ஊட்டி பிங்கர்போஸ்ட் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

நீலகிரி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள்(கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத), மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி லிட்டர் அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் ஆகியோரில் ஒரு நபருக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட உள்ளது.

இந்த மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் வழங்கப்பட உள்ளது. 486 அங்கன்வாடி பணியாளர்கள், 216 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 413 ஆஷா பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் நேரடியாக வழங்கப்படுகிறது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 869 குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 52,982 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதனால் ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித், குழந்தைகளுடன் சேர்ந்து உடல் நலன் பேணுவது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, ஆர்.டி.ஓ.துரைசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!