நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை ; அமைச்சர் உறுதி
Nilgiri News, Nilgiri News Today - அங்கன்வாடிமைய கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் ராமச்சந்திரன்.
Nilgiri News, Nilgiri News Today- சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், பர்லியார் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் கரன்சி அங்கன்வாடிமைய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் பர்லியார் ரேஷன் கடை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து கரன்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவர், வண்டிச்சோலை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் சோலாடாமட்டம் சாலைப்பணிகள், பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நூலக சீரமைப்பு பணி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்குழி கிணறு, எடப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திரா நகர் பகுதியில் சேமிப்பு கிடங்கு, ஆரக்கொம்பையில் ஜல்ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என ரூ.1.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டார்.
பேரட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி சமையல்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர், ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில் கழிவுகள் சேகரிக்கும் பிக்-அப் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் அங்கு படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி, ஊராட்சியின் பல்வேறு பகு திகளில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
குன்னூர் தாலுகா, உலிக்கல் பேரூராட்சி மற்றும் மேலூர், உபதலை, பர்லியார், எடப்பள்ளி, வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் வளர்ச்சித்தி ட்டப்பணிகளை ஆய்வு செய்து அங்கு பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை பார்வையிட்டோம்.குன்னூர் அடுத்த பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மோகனகு மாரமங்கலம், ஆறுமுகம், பர்லியார் ஊராட்சி தலைவி சுசீலா, பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu