உதகையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆட்சியரிடம் மனு

உதகையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆட்சியரிடம் மனு
X
கொரோனா பேரிடர் காலம் , சுற்றுலா தலங்கள் மூடல் உள்ளிட்டவைகளால் கடும் பாதிப்படைந்துள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தங்கள் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட ஆட்டோக்கள் இயக்குவதாலும் சொந்த வாகனங்கள் மூலம் வாடகைக்கு செல்வோரும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாலும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவித்தனர் .

கொரோனா பேரிடர் காலம் துவக்கத்தில் இருந்து இன்று வரை சுற்றுலா பயணிகள் வருகை தடைபட்ட காரணத்தால் மேக்சி கேப் வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் காலாண்டு வரி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன .

மேலும் சுற்றுலாவை நம்பியே இந்த மாவட்டத்திலுள்ள தாங்கள் முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளதாகவும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தங்களிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம் என கூறினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!