வெளி மாநிலங்களில் இருந்து ஊட்டி வர இனி இ-பாஸ் வேண்டாம்
கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து சென்றனர். இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நி லையில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி முதல் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், வெளி மாநில சுற்றுலா பயணிகள் இ- பாஸ் பெற்று வந்து சென்றனர். இருப்பினும், வழக்கமான கூட்டம் வரவில்லை.
தற்போது, நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்கு இருந்த இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காண்பித்தால் போதும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu