சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரிப்பு; உஷாராக இருக்க நீலகிரி எஸ்.பி அறிவுறுத்தல்

சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரிப்பு; உஷாராக இருக்க நீலகிரி எஸ்.பி அறிவுறுத்தல்
X

Nilgiri News, Nilgiri News Today- சைபர் க்ரைம் போலீசார் மூலம், காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் நடந்தது.

Nilgiri News, Nilgiri News Today- பொதுமக்கள், சைபர் க்ரைம் சார்ந்த கு்ற்றங்களில் சிக்காமல், கவனமாக இருக்க வேண்டும் என, நீலகிரி போலீஸ் எஸ்.பி பிரபாகர் அறிவுறுத்தினார்.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் சைபர் க்ரைம் போலீசார் மூலம், காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் நடந்தது. இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர் கலந்து கொண்டு போலீசார் மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நீலகிரி மாவட்டத்தில், கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர். இதே போல் ஒரு கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளோம்.

சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் தேடி வருகின்றனர். அவர்கள் அதிக வட்டி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் சைபர்க்ரைம் குற்றவாளிகளிடம் ஏமாறவேண்டாம். சைபர் க்ரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!