சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு, நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை

சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு, நீலகிரி கலெக்டர்  எச்சரிக்கை
X

Nilgiri News, Nilgiri News Today- சுற்றுலா நிறுவனங்களுக்கு, நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரியில் அனுமதியின்றி சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Nilgiri News, Nilgiri News Today- தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமானது நீலகிரி மாவட்டம். அதே போல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம் கொடைக்கானல். தமிழகத்தில், சுற்றுலா செல்லலாம் என, குடும்பத்தினர் தீர்மானம் செய்து பேச்சை ஆரம்பித்தாலே, அதில் ஊட்டியும், கொடைக்கானலும்தான் முக்கிய சாய்ஸ் ஆக இருக்கும். அதன்பிறகே, மற்ற நகரங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து, பேச்சு துவங்கும்.

குறிப்பாக, தமிழகத்தை பொருத்தவரை பெரும்பாலான சுற்றுலா தலங்கள், கோவில்களை அடிப்படையாக கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களே, மக்களுக்கு இயற்கை அம்சங்கள் நிறைந்த, மனதுக்கு ரம்யமான பசுமை நிற மலைப்பகுதிகளாக அமைந்திருக்கின்றன.

நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

விவசாயத்திற்கு அடுத்தபடியாக நீலகிரியில் சுற்றுலா பெரிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ஹோம் ஸ்டே, பெட் அன்ட் பிரேக்பாஸ்ட், கேம்ப் சைட் முதலிய சுற்றுலா தொழில் செய்யும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆனால், இதுநாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்கள் www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கு ஊட்டி வென்லாக் சாலையில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர் நேரில் அணுகலாம் என்றும், கூடுதல் தகவல் தேவைப்பட்டால் இ-மெயில் முகவரி touristofficeooty@gmail.com, தொலைபேசி எண் 0423-2443977, 7550009231 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!