கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்
X

தற்கொலை செய்து கொண்ட தினேஷ். 

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்பியூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கை மறு விசாரணை செய்ய கோத்தகிரி தாசில்தாருக்கு மனு அளித்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் ஏ.டி. எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு தரப்பு சாட்சிகள், குற்றம்சாட்டப்பவர்களிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் கடந்த 2017ம் ஆண்டு ஆண்டு ஜூலை 3-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் தற்கொலையில் மர்மம் இருப்பதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில் தற்போது தினேஷ் தற்கொலையை மறுவிசாரணை செய்ய போலீசாரால் மனு அளிக்கபட்டுள்ளது. இந்த மனு கோத்தகிரி சோலூர்மட்டம் போலீசாரால் கோத்தகிரி தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business