கூடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆய்வு

கூடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆய்வு
X
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி நடைபெற்று வரும் மருத்துவ முகாமினையும் வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணத்தினால் தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணத்தினால் தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதில் கூடலூர் அத்திப்பாளி, புத்தூர்வயல், தொரப்பள்ளி ஆகிய நிவாரண முகாம்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் அடிப்படைவசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி நடைபெற்று வரும் மருத்துவ முகாமினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு போர்வைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

ஆய்விற்கு பின்வனத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

இந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடலில் உருவாகியுள்ள தாழ்வழுத்தநிலை புயலாக வலுப்பெற்றுள்ள காரணத்தால் 14.05.2021 முதல் நீலகிரிமாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த நிவாரண முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கூடலூர் வட்டத்தில், 3 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில்அத்திப்பாளி முகாமில் 14 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 71 நபர்களும்,புத்தூர்வயல் முகாமில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 52 நபர்களும், தொரப்பள்ளிமுகாமில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 நபர்களும் என மொத்தம் 3 முகாம்களில்143 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பந்தலூர் வட்டத்தில்,அம்பலமூலா முகாமில் 34 நபர்களும், பொன்னானி முகாமில் 13 நபர்களும் எனமொத்தம் 2 முகாம்களில் 47 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story