புலியை பிடிக்க தீவிர தேடுதல்: 9ம் நாளாக தொடரும் வேட்டை - இன்று சிக்குமா?

புலியை பிடிக்க தீவிர தேடுதல்: 9ம் நாளாக தொடரும் வேட்டை - இன்று சிக்குமா?
X

புலி மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் மருத்துவ குழு, வன ஊழியர்கள் 150 பேர் கொண்ட 20 குழுக்கள் தேடுதல் பணிக்கு சென்றது.

புலி மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் மருத்துவ குழு, வன ஊழியர்கள் 150 பேர் கொண்ட 20 குழுக்கள் தேடுதல் பணிக்கு சென்றது.

ஒன்பதாம் நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் தேடுதல் வேட்டை இன்றாவது சிக்குமா புலி மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் மருத்துவ குழு மற்றும் வன ஊழியர்கள் கொண்ட குழுக்கள் தேடுதல் பணிக்கு சென்றது.

நான்கு மனித உயிர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி இடம் மாறி பெயர்வதால் இதுவரை வனத்துறைக்கு சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

மசினகுடி பகுதியில் நேற்று முன்தினம் ஒருவரை தாக்கி கொன்ற புலியால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் மேலும் புலியை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழக கேரளா வனத்துறையினர் 150 க்கும் மேற்பட்டோர் 20 குழுவாக பிரிந்து வனத்தில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றுடன் 9 ம் நாளாக புலியை தேடும் பணி துவங்கியது அதிகாலை 6 மணிக்கு வனக் குழுவானது தேடுதல் பணிக்கு சென்றது. இதனிடையே பொதுமக்கள் யாரும் வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல வேண்டாமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!