நீலகிரி மாவட்டத்தில், விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில், விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில் உள்ள பூங்கா (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today - விடுமுறை நாளில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Nilgiri News, Nilgiri News Today- மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை காட்சிகள் நிறைந்த வனப்பகுதிகள் மற்றும் எண்ணற்ற சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்க்கவும், இயற்கை அழகினை ரசிக்கவும் தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். தற்போது சுதந்திர தின தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலைமோதியது. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அங்கு பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டு ரசித்தனர்.

மேலும் அதன் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்பத்தினருடன் தாவரவியல் பூங்கா புல்வெளி தரையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, குன்னூர் சிமஸ் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே மலைரயிலில் பயணிக்க விரும்புவா். வனத்தின் நடுவே வரும் ரயிலில், அங்குள்ள இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், வனவிலங்குகள் போன்றவற்றை ரயிலில் இருந்தபடியே பார்த்து செல்லலாம் என்பதால், பெரும்பாலானவர்கள் அந்த ரயிலிலேயே பயணிக்க விரும்புவர்.

நேற்று நீலகிரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மலை ரயிலிலேயே பயணித்தனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரயிலும் இயக்கப்படுகிறது. வருகிற 27-ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. நேற்று சுற்றுலா வந்தவர்களில் பெரும்பாலானோர் ரயிலிலேயே பயணித்து, நீலகிரிக்கு சென்றனர். அப்போது அவ ர்கள் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணித்தனர். மேலும் சிறப்பு மலைரயில் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!